Posts

Showing posts from January, 2022

ஒரு கனவு

நீண்ட பயணத்துக்குபின் உண்டான சோர்வில் அந்த கோவில் முற்றத்தின் இடது பக்கத்தின் இருந்த மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்தோம்.  பைக்கின் கிளட்சினை அந்த பத்து கிலோ மீட்டர் குண்டும் குழியுமான பாதையை கடக்க தொடர்ந்து மாற்றியதால் என்னுடைய கால் மூட்டு நன்றாக வலித்தது.  திலக் தான் அந்த கோவிலை பற்றி என்னிடம் சொன்னான். "நம்ப போறவழியிலிருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தாண்டா! நமக்கு ஒரு பிரேக்கு கெடச்ச மாதிரியும் இருக்கும். எங்க அம்மாவுக்கு பக்கத்துக்கு ஊருதான், ஆயா இருக்கும் போது  இங்க  அடிக்கடி கூட்டாரும்." தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த கோவிலுக்கு செல்லும் பாதைக்காக இடது புறமாக இறங்கியவுடன் சாலையின் இரண்டு புறமும் அவ்வளவு மரங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வெக்கையும் புழுதியும் வந்த இவ்வளவு தொலைவையும் இந்த சிறிய கோவில் பாதை மாற்றியது.  மணி நான்கை கூட தொடவில்லை ஆனால் இந்த பாதை ஆறு மணி போல வெளிச்சமற்று இருந்தது.  இவ்வளவும் நேரமும் தொடர்ந்து பேசி வந்த திலக்கும் பேச்சை நிறுத்திவிட்டு என்னிடம் நெருங்கி அமர்ந்...

இடம்

வலம் இடம்  - என் பார்வை   ஜெ  சொல்வதை போல படித்ததை நம் எண்ணமாக ஆகினால் ஒழிய அது மற்றவர் கருத்தாகவோ அல்லது கூற்றாகவோதான் இருக்கும். அதற்காகவே இந்த பதிவு. நேற்று "வலம் இடம்" சிறுகதையை படித்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய குழுமத்தில் அதற்குள் அந்த கதையின் வாசிப்பு கோணம், தரிசனம் பற்றிய விவாதம் ஆரம்பித்துவிட்டது. ஜெவின் தளத்தில் வரும் கடிதங்களை பார்த்து என்னுடைய வாசிப்பின் குறை மற்றும் இடைவெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்து திருத்திகொள்ள முயற்சிக்கிறேன். "வலம் இடம்" கதை நடக்கும் இடமே நம்மை 2020ல் ஜெ எழுதிய 100 கதைகளின் திருவிழாவிற்கு கொண்டு சேர்கிறது. குமரேசன், செல்லமை பெயர்களை கூட பழைய கதைகளை இருப்பதாக நினைவு கூர்கிறேன். முதலில் கதையின் தலைப்பை கதையுடன் தொடர்பு கொள்ள நினைக்கிறேன். குமரேசன் அவனுடைய தூக்கத்தில் இரண்டு எருமைகளின் இருப்பை  உணர்கிறான். அந்த உணர்வும் தர்க்கமும் ஒத்திசையாமை கண்டு கோபம் கொண்டு எருமையின் பின்பக்கத்தில் அடித்து குளியலுக்கு கொண்டு செல்கிறான். அன்று இரவு வரும் கனவில் இரண்டு எருமையை கண்டு விழித்தெழுந்து எருமை செய்யும் செயலை பார்த்து இன்னொரு எருமை ...

Writing

 I always admired any writings by anybody. Even a simple self proclamation, musings like this to classic writings. I wondered why I admire them. My friend named Satheesh from my Engineering (Undergraduate) used to talk mostly in English during our one to one conversation. His English would be full of grammatical errors and not well formed sentence but he still will be able to convey his idea and his enthusiasm will stick to you. I don't think he has written anything subsequent but it gives me the answer on why I admire writings (from how he speaks eloquently - here eloquent does not mean with grammatical correctness). It is the confidence one have which I admire and would like to acquire. I get my complexes on seeing many of fellow readers who write letters to Jeyamohan commenting on an article or sharing an emotion. I have been his reader and also has been reading literature seriously for at least 10 years now and could not write such a well formed article. I immediately shoot thi...