ஒரு கனவு
நீண்ட பயணத்துக்குபின் உண்டான சோர்வில் அந்த கோவில் முற்றத்தின் இடது பக்கத்தின் இருந்த மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்தோம். பைக்கின் கிளட்சினை அந்த பத்து கிலோ மீட்டர் குண்டும் குழியுமான பாதையை கடக்க தொடர்ந்து மாற்றியதால் என்னுடைய கால் மூட்டு நன்றாக வலித்தது.
திலக் தான் அந்த கோவிலை பற்றி என்னிடம் சொன்னான்.
"நம்ப போறவழியிலிருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தாண்டா! நமக்கு ஒரு பிரேக்கு கெடச்ச மாதிரியும் இருக்கும். எங்க அம்மாவுக்கு பக்கத்துக்கு ஊருதான், ஆயா இருக்கும் போது இங்க அடிக்கடி கூட்டாரும்."
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த கோவிலுக்கு செல்லும் பாதைக்காக இடது புறமாக இறங்கியவுடன் சாலையின் இரண்டு புறமும் அவ்வளவு மரங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வெக்கையும் புழுதியும் வந்த இவ்வளவு தொலைவையும் இந்த சிறிய கோவில் பாதை மாற்றியது. மணி நான்கை கூட தொடவில்லை ஆனால் இந்த பாதை ஆறு மணி போல வெளிச்சமற்று இருந்தது. இவ்வளவும் நேரமும் தொடர்ந்து பேசி வந்த திலக்கும் பேச்சை நிறுத்திவிட்டு என்னிடம் நெருங்கி அமர்ந்து இருபுறமும் பார்த்தான்.
நான் இவ்வளவு பெரிய கோவிலை எதிர்பார்க்கவில்லை. அரை வட்ட வடிவான கல்பாவித்த முற்றத்திலிருந்து பத்து பதினைந்து படிகள் ஏறி கோவில் முகப்புக்குச் சென்றது. அந்த முகப்புக்கு இருபுறமும் பல கால்கள் கொண்ட மண்டபங்கள் இருந்தது.
.....
Comments
Post a Comment