இடம்
வலம் இடம் - என் பார்வை
ஜெ சொல்வதை போல படித்ததை நம் எண்ணமாக ஆகினால் ஒழிய அது மற்றவர் கருத்தாகவோ அல்லது கூற்றாகவோதான் இருக்கும். அதற்காகவே இந்த பதிவு.
நேற்று "வலம் இடம்" சிறுகதையை படித்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய குழுமத்தில் அதற்குள் அந்த கதையின் வாசிப்பு கோணம், தரிசனம் பற்றிய விவாதம் ஆரம்பித்துவிட்டது. ஜெவின் தளத்தில் வரும் கடிதங்களை பார்த்து என்னுடைய வாசிப்பின் குறை மற்றும் இடைவெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்து திருத்திகொள்ள முயற்சிக்கிறேன்.
"வலம் இடம்" கதை நடக்கும் இடமே நம்மை 2020ல் ஜெ எழுதிய 100 கதைகளின் திருவிழாவிற்கு கொண்டு சேர்கிறது. குமரேசன், செல்லமை பெயர்களை கூட பழைய கதைகளை இருப்பதாக நினைவு கூர்கிறேன்.
முதலில் கதையின் தலைப்பை கதையுடன் தொடர்பு கொள்ள நினைக்கிறேன். குமரேசன் அவனுடைய தூக்கத்தில் இரண்டு எருமைகளின் இருப்பை உணர்கிறான். அந்த உணர்வும் தர்க்கமும் ஒத்திசையாமை கண்டு கோபம் கொண்டு எருமையின் பின்பக்கத்தில் அடித்து குளியலுக்கு கொண்டு செல்கிறான். அன்று இரவு வரும் கனவில் இரண்டு எருமையை கண்டு விழித்தெழுந்து எருமை செய்யும் செயலை பார்த்து இன்னொரு எருமை இடப்பக்கம் இருந்தால் மட்டுமே எதிர்ப்படும் விளைவுகளை கவனிக்கிறான். இந்த இடத்தில் "வலம் இடம்", இருமை, எருமையின் கூட்டு வாழ்க்கை கூறப்படுகிறது. இதன் நீட்சியாகவே குமரேசன் செல்லமைக்கு வலது இடது கை பற்றி சொல்கிறான். மேலும் எருமை இறந்த பிறகு அந்த நிழல் எருமைக்கு மூக்கணாங்கயிறு போட்டிருந்தால் தன் எருமை இறந்திருக்காது என்றும் சொல்கிறான். கடைசியில் வரும் கனவிலும் இரண்டு எருமை கன்றுகள் வருகிறது அதில் சரியான (வலம்/இடம்) விரலை தேர்த்தெடுத்து இரண்டு எருமையையும் பெற்றுக்கொள்கிறான்.
இந்த வலம்/இடம் எனக்கு Us படத்தில் நினைவுகளை கொண்டுவருகிறது.
Comments
Post a Comment